நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

போலீஸ் கதைகள் ஹிட்

இயக்குநர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிங்கம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹெட் பெற்றது. ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், கிட்டத்தட்ட ரூ.90 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. போலீஸ் அதிகாரியாக நடித்திருந்த சூர்யாவின் நடிப்பும், டயலாக்கும் மிகவும் பிரபலமானது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட்டானது மட்டுமில்லாமல், இன்றும் ரசிகர்களின் ப்ளே லிஸ்டில் இருந்து வருகின்றது.

மாபெரும் வெற்றி

இயக்குநர் ஹரி இயக்கத்தில் வெளியான சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த வகையில் இந்த சிங்கம் திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. போலீஸ் கதைகளை இயக்கும் பல இயக்குநர்களுக்கு மத்தியில், ஹரி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார். இவர் இயக்கிய சாமி திரைப்படமும், சிங்கம் திரைப்படமும் இவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. ஹரிக்கு மட்டுமில்லாமல் சூர்யாவின் கெரியருக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாக இந்த திரைப்படம் கருதப்பட்டது. இந்நிலையில் சிங்கம் திரைப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து ரசிகர்கள் #13years of singam என்ற ஹாஷ் டேக்கை சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here