கனா காணும் தொடரில் நடித்து வரும் ராஜா வெற்றி பிரபுவும், தீபிகா வெங்கடாசலமும் குடும்பத்தினர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தன்னை சுற்றி பேசப்பட்ட வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார் தீபிகா.
சீரியல் பிரபலங்கள்
விஜய் டிவியில் பிரபலமான கனா காணும் காலங்கள் ஆரம்பத்தில் பள்ளி பருவத்தை மையமாக வைத்து ஒளிபரப்பானது. இதை தொடர்ந்து தற்போது அதே பெயரில் கல்லூரி பருவ நட்பை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த இரண்டு தொடர்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமில்லாமல் இதில் நடித்துவரும் நடிகர், நடிகைகள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது கனா காணும் காலங்கள் தொடரின் புதிய சீசன் ஓடிடியில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள் அனைவரும் சமூக வலைதளத்தில் ஃபேமசாக இருக்கின்றனர்.
தெளிவான விளக்கம்
அந்த வகையில் மிகவும் பிரபலமான தீபிகா மற்றும் ராஜா வெற்றி பிரபு இருவரும் நிஜத்தில் காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் குடும்பத்தினர்கள், நண்பர்கள் மத்தியில் கோலாகலமாக இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் இவர்களின் திருமண புகைப்படமும் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டது. மேலும்இன்னொரு தரப்பினர் தீபிகாவை விட ராஜா வெற்றி பிரபு வயதில் குறைந்தவர் என்று இணையத்தில் தகவல்களை பரப்பினர். இந்த தகவல் இணையத்தில் தீயாக பரவ, தீபிகா சமீபத்தில் இதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார். அவர் கொடுத்துள்ள விளக்கத்தில்,” நான் பெரிய பெண் எல்லாம் இல்லை. விக்கிபீடியாவில் நான் 1995 பிறந்தவர் எனவும், அவர் 1998-ல் பிறந்தவர் எனவும் தவறாக இருக்கிறது. ஆனால் உண்மையில் நான் 1997-ல் பிறந்தேன், அவர் 1996-ல் பிறந்தார். 1 ஆண்டு 10 மாதங்கள் ராஜா வெற்றி பிரபு என்னை விட பெரியவன்” என்று கூறியுள்ளார்.