முதன்முறையாக குடும்பத்துடன் போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நடிகை மைனா நந்தினி.

சீரியல் பிரபலம்

நடிகை மைனா நந்தினி சினிமா, சீரியல் இன்று பிஸியாக இருந்து வருகிறார். விஜய் டிவியின் பிரபல சீரியலான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் பல ரசிகர்களை பெற்ற இவர், அந்த தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனதால் இவரை மைனா நந்தினி என்று அழைக்க தொடங்கிவிட்டனர். அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஏராளமான ரசிகர்களை பெற்றார் மைனா. விஜய் டிவியில் மட்டும் இல்லாமல் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று கலக்கி வந்த மைனா நந்தினி தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லியோ படத்தில் கமிட் ஆனதை சமீபத்தில் புகைப்படம் மூலம் பதிவிட்டு இருந்தார்.

போட்டோஷூட் புகைப்படங்கள்

இந்நிலையில் சமீபத்தில் மைனா நந்தினி குடும்பத்துடன் தாய்லாந்தில் பட்டாயா சிட்டி என்ற பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தனர். இதன் சம்பந்தப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்ட மைனாவுக்கு பல லைக்குகளும், ஹார்டுகளும் குவிந்து வருகின்றது. மேலும் முதன்முறையாக குடும்பத்துடன் போட்டோ சூட் எடுத்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். மிகவும் ஸ்டைலாக இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here