முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரகு தாத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.

பிஸி ஷூட்டிங்

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் ரகு தாத்தா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. தெலுங்கில் போலா ஷங்கர் திரைப்படத்தின் தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. தமிழில் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்து கொண்டிருந்த ரகு தாத்தா திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவு பெற்றதை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஷூட்டிங் நிறைவு

இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சுமன் குமார் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். ‘கேஜிஎஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்துவிட்ட நிலையில் தற்போது படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெறும் என பட குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இந்த ஆண்டே ரகு தாத்தா திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here