யூடியூப் சேனல் மூலம் பிரபலமான எருமை சாணி விஜய்க்கும், நட்சத்திராவுக்கும் இன்று கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது.

யூடியூப் பிரபலம்

யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர் நடிகர் விஜய். இவரது நடிப்புக்கென்று பல ரசிகர்கள் உள்ளனர். தனது சேனலில் விதவிதமான வீடியோக்களை போட்டு பிரபலமான இவர், ஹிப் ஹாப் ஆதி நடித்த மீசையை முறுக்கு, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். நடிகராக ஹிட் கொடுத்த விஜய், அருள்நிதி ஹீரோவாக நடித்த டி பிளாக் திரைப்படத்தை இயக்கினார். க்ரைம் திரில்லர் படமாக உருவாகியிருந்த டி பிளாக் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

கோலாகலமான திருமணம்

இயக்குநராக மட்டும் இல்லாமல் இந்த படத்தில் அருள்நிதிக்கு நண்பனாக இவர் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று விஜய் தனது நீண்ட நாள் காதலியான நட்சத்திராவுடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். தற்போது இருவருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த புகைப்படத்தை விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here