நடிகர் விஜய் தன் கழுத்தைப் பிடித்து லிப்டில் தள்ளியதாக இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.

லியோ கூட்டணி

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். அக்டோபர் 19 ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், அர்ஜுன், உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். இயக்குநராக இருக்கும் மிஷ்கின் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அதனால் மிஷ்கின் மற்றும் விஜய்யின் காம்போ குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கின்றனர். விஜய் நடிப்பில் வெளியான யூத் திரைப்படத்தில் வின்சென்ட் செல்வா இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மிஷ்கின். அப்போது இருந்தே விஜய்க்கு மிஷ்கின்க்கும் நல்ல நட்பு இருந்து வருகின்றது.

தள்ளிய விஜய்

இந்நிலையில் விஜய் குறித்து மிஷ்கின் பேசி உள்ள பழைய வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகின்றது. அவர் கூறி இருப்பதாவது. “விஜய் யூத் படத்தில் நடித்த பொழுது அந்த படத்தின் இயக்குநரான வின்சென்ட் செல்வாவிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அப்பொழுது நான் விஜய்யிடம் கிட்டத்தட்ட ஆறு மாதமாக எதுவும் பேசவே இல்லை. அப்போது விஜய் ஏன் என்னிடம் பேசவே மாட்டேங்கிறீங்க என்று கேட்டார். நான் உங்களை ஒரு கதையோடு தான் சந்திக்க வேண்டும் என்று கூறினேன். அதன் பிறகு சித்திரம் பேசுதடி படத்தை எடுத்து முடித்துவிட்டு விஜய்க்கு அதை போட்டு காட்டினேன். அப்போது லிப்ட்டில் சென்று கொண்டிருக்கும் பொழுது இந்த கதை உங்களுக்காக தான் முதலில் எழுதுகிறேன் என்று கூறினேன். அப்போது விஜய் என் கழுத்தை பிடித்து இழுத்து என்னை லிப்டில் தள்ளி அப்புறம் ஏன் என்னிடம் வந்து சொல்லவில்லை என்று கேட்டார்” என்று அந்த பேட்டியில் மிஷ்கின் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here