விஜய் ஆண்டனி இயக்கி, ஹீரோவாக நடித்திருக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

அமோக வரவேற்பு

2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டது. இந்த படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் காவியா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலிகான், ராதாரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஆரம்பத்தில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இப்படத்திற்கு நல்ல பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் குவிந்த வண்ணம் உள்ளது. ஃபேமிலி ஆடியன்ஸ்சுக்கு இந்த படம் பிடித்துள்ளதாக கருத்துக்கள் வந்துள்ளது.

படிப்படியாக உயர்ந்தது

பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை ஆரம்பத்தில் வெளியிடக் கூடாது என்று பலமான எதிர்ப்பு கிளம்பிய போதிலும், பல தடைகளை தாண்டி திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியானது. பிச்சைக்காரன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிச்சைக்காரனின் மூளையை பணக்காரனுக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்ட பிறகு அவன் செய்யும் வேலை தான் இந்த படத்தின் கதை. இந்த கான்செப்ட் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் பிச்சைக்காரன் 2 படமும் பிடித்து போகும் என்றும் கருத்துக்கள் நிலவியது. தற்போது இப்படத்திற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

குஷியில் விஜய் ஆண்டனி

இந்நிலையில், இப்படம் முதல் மூன்று நாட்களில் ரூ.22 கோடி வரை வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைக் காட்டிலும் ஆந்திராவில் பிச்சைக்காரன் 2 படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இப்படம் பிளாக் பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்து வருவதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகின்றது. பிச்சைக்காரன் 2 படத்துக்கு கிடைத்து வரும் அமோக வரவேற்பால் விஜய் ஆண்டனி செம்ம ஹாப்பியாக இருப்பதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here