சமீபத்தில் வெளியாகி ரசிக்ர்களின் ஆதரவை பெற்ற ஃபர்ஹானா படக்குழுவினருக்கு நடிகர் சிவகுமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஃபர்ஹானா

மான்ஸ்டர், ஒரு நாள் கூத்து போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபர்ஹானா’. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான ‘ஃபர்ஹானா’ திரைப்படம் மே 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நேரில் பாராட்டு

‘ஃபர்ஹானா’ திரைப்படம் வெளியான தினத்தில் இருந்தே பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. நடிகர், நடிகைகள் பலர் சமூக வலைதளங்கள் மூலம், ஃபர்ஹான படக்குழுவினருக்கும், ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிவகுமார் ஃபர்ஹானா படக்குழுவினரை சந்தித்து தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here