லியோ படத்தில் நடிகர் சஞ்சய் தத் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு

நடிகர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார் லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்தில் நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் பிரியா ஆனந்த், அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். ஆரம்பத்திலிருந்து இப்படத்தின் மீது உள்ள ஹைப் காரணமாக ரசிகர்களுக்கு மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் இரண்டு மாதங்களாக நடைபெற்றது. ஷூட்டிங் முடித்து திரும்பிய பட குழுவினர் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மெயின் வில்லன்

இந்நிலையில் இப்படத்தில் சஞ்சய் தத்தின் கதாபாத்திரம் குறித்து தற்போது சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் விஜய்க்கு தந்தையாக நடிகர் சஞ்சய் தத் நடித்திருப்பதாக செய்திகள் இணையதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் லியோ ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் விஜய் இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடித்திருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஒவ்வொரு நடிகரின் கதாபாத்திரமும் இப்படத்தின் மீது உள்ள ஹைப்பை அதிகரித்து வருகின்றது. இந்த படத்தின் மெயின் வில்லனே சஞ்சய் தத் தான் என்றும் தகவல் கசிந்துள்ளது. அது மட்டுமில்லாமல் விஜய்க்கு சகோதரராக அர்ஜுன் நடித்திருக்கிறார் என்ற லேட்டஸ்ட் தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் இப்படத்தை கான ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here