மாமன்னன் படத்தின் முதல் சிங்கள் குறித்து மாஸ் அப்டேட் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

பக்கா மாஸ் கூட்டணி

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.

அசத்தல் அப்டேட்

இப்படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது முதல் சிங்கள் பாடல் ஜூன் 19ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் பாடலை வடிவேலு பாடியுள்ளார். எப்பொழுதும் காமெடியாகவே பார்த்து பழகிய நடிகர் வடிவேலு இந்த படத்தில் டெரராக நடித்துள்ளார். இவர்தான் முக்கியமான வில்லனாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திரைப்படம் வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா ஜூன் 1ஆம் தேதி நடக்க உள்ளதாகவும், அந்த விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்து கொள்ள போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்பு

இதனால், மாமன்னன் ஃபர்ஸ்ட் சிங்கிள் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கிய பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த நிலையில், முதன்முறையாக ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்துள்ளார் மாரி செல்வராஜ். இதனால் இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here