நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

முன்னணி நடிகர்

தமிழில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜெயம் ரவி. இந்த ஒரு படத்தின் ஹிட்டே இவரை முன்னணி நடிகராக வலம் வர உதவியது. அதன்பிறகு இவரது நடிப்பில் வெளியான எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, மழை, சந்தோஷ் சுப்பிரமணியம், எங்கேயும் காதல் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்தார் ஜெயம் ரவி. 2009 ஆம் ஆண்டு நீண்ட நாள் காதலியான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். காதல் ஜோடிகளாக இருந்து வரும் இவர்கள், அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருவார் ஆர்த்தி. அது மட்டும் இல்லாமல் இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு பல ரசிகர்களும் உள்ளனர்.

பார்ட்டி மோட்

இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஆர்த்தி, தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அசர வைத்து வருகிறார். ஆர்த்தியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் “ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு அழகாக உள்ளீர்கள்” என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் ஹிட் ஜெயம் ரவியை மட்டுமில்லாமல் அவரது மனைவி ஆர்த்தியையும் குஷி படுத்தியுள்ளது. சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய ஆர்த்தி பிரம்மாண்டமாக பார்ட்டி ஏற்பாடு செய்து சினிமா பிரபலங்களை அழைத்து விருந்து கொடுத்து வேற லெவல் மாஸ் காட்டினார். அதுமட்டும் இல்லாமல் “சிப் அண்ட் பெயிண்ட்” பார்ட்டி ஏற்பாடு செய்து நெருங்கிய நண்பர்களுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் பார்ட்டி ஒன்றை கொடுத்தார்.

மாஸ் காட்டும் ஆர்த்தி

இந்நிலையில், ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வாய் அடைத்து போய் உள்ளனர். சந்தன நிற புடவையில் ஆர்த்தி நடந்து வரும் வீடியோவும் அதன் சம்பந்தப்பட்ட புகைப்படத்தையும் பார்த்த ரசிகர்கள் சீக்கிரமாக சினிமாவில் நடிங்க என்றும் உங்கள் வரவுக்காக தமிழ் சினிமா காத்துக் கொண்டிருக்கிறது என்றும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தனது புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் ஆர்த்தி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here