பாலிவுட்டில் “பிக் பி” என்று அனைவராலும் அழைக்கப்படும் அமிதாப் பச்சன் செய்த செயல் அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

டிராபிக்கில் சிக்கிய பிக் பி

பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன், எப்பொழுதும் படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்தில் சென்று விடுவார். அவரது இந்த பங்க்சுவாலிட்டி தான் இன்றும் அவரை சினிமா துறையில் சூப்பர் ஸ்டார் ஆக வைத்துள்ளது. இந்த வயதிலும் பல படங்களை கைவசம் வைத்துள்ள அமிதாப்பச்சன், சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். ஆனால் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அவரது கார் டிராபிக்கில் சிக்கியது. இதனால் படப்பிடிப்புக்கு நேரமாகும் என்று நினைத்த அவர், ரோட்டில் இறங்கி பைக்கில் சென்று கொண்டிருந்த நபரிடம் லிப்ட் கேட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார்.

நன்றி நண்பா

இதுதொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார் அமிதாபச்சன். மேலும் அவர் குறிப்பிட்டுள்ள பதிவில்; “ரைடுக்கு நன்றி நண்பா. நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் நீங்கள் ஒப்புக்கொண்டு படப்பிடிப்பிற்கு நடக்கும் இடத்தில் வேகமாகவும், தீர்க்க முடியாத டிராபிக் சிக்னலை தவிர்த்தும் என்னை கொண்டு வந்து சேர்த்தீர்கள். தொப்பி, ஷாட்ஸ், மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வயதிலும் படப்பிடிப்பிற்கு சரியான நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற தொழில் பத்தியையும், அவரது நேர்மையையும் ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். அவர் பதிவிட்டுள்ள பதிவிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here