இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் புது படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்தில் டாப்

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நிவின் பாலி. தமிழிலும் சில படங்கள் நடித்தார். ஆனால் தமிழில் இவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பிரபலமாகவில்லை. இந்நிலையில் மலையாள திரை உலகின் முன்னணி இயக்குநராக இருக்கக்கூடிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வெற்றி கூட்டணி

சமீபத்தில் இவர் இயக்கிய “2018” என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இதை தொடர்ந்து தற்போது நிவின் பாலி நடிக்கப் போகும் படத்தை இயக்க உள்ளார் ஜூட் ஆண்டனி ஜோசப். ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான “ஓம் சாந்தி ஓஷானா” என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார். அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. “ஓம் சாந்தி ஓஷானா” படம் போலவே இந்த படமும் சூப்பர் ஹிட் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here