சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தாலாட்டு” சீரியல் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சீரியல் ஆர்வம்

தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணியில் இருக்கக்கூடிய சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. காலை முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து பல்வேறு சீரியல்களை இந்த சேனல் ஒளிபரப்பி வருகின்றது. டிஆர்பியில் முன்னணியில் இருக்கக்கூடிய சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை ரசிகர்கள் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

சீரியல் முடிவு

இந்நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற தொடர் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தொடரில் ஸ்ருதி ராஜ், தெய்வமகள் கிருஷ்ணா ஆகியோர் இணைந்து நடித்து வருகின்றனர். ஏப்ரல் 26, 2021 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த தொடர் முடிவுக்கு வரப்போவதாக கூறுகின்றனர். விரைவில் ‘தாலாட்டு’ தொடர் முடிக்கப்பட போவதாகவும், அதற்கு பதிலாக வேறொரு தொடர் அதேநேரத்தில் ஒளிபரப்பாக உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here