AK62 படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராய், திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது.

இரட்டை வேடம்

அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமணி இயக்கும் அஜித் 62 படத்திற்கு “விடாமுயற்சி” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி இப்படத்தின் டைட்டில் வெளியிட்டது. தற்போது இந்த படம் குறித்து இன்னொரு அப்டேட் வெளியாகி உள்ளது. AK62 படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க போவதாகவும், அதில் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

ஹிட் காம்போ

பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷாவின் காம்போ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பிறகு அஜித் படத்திற்கு இருவரையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் படக் குழுவினர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராத நிலையில், விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே அஜித்துடன் இணைந்து திரிஷா, ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல் ஐஸ்வர்யா ராய்யும், அஜித் நடிப்பில் வெளியான “கண்டுகொண்டேன்
கண்டுகொண்டேன்” படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை என்றாலும் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here