நடிகை நமீதா கிரிக்கெட் விளையாடிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.

வாய்ப்புகள் குறைந்தது

“எங்கள் அண்ணா” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நமீதா, மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், பம்பரக் கண்ணாலே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். நமீதா தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்துள்ள நமிதாவுக்கு, மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாள் உள்ளது. கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நமீதாவிற்கு, உடல் எடை அதிகரித்த காரணத்தினால் கொஞ்சம் கொஞ்சமாக சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதன்பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

சிக்ஸர் அடித்த நமீதா

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று 28 நாட்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் நமீதா. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு நமீதா, வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பின் இவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே கோவை தெற்கு பாஜக சார்பில் பாஜக குடும்ப பிரிமியர் லீக் கிரிக்கெட் விளையாட்டு போட்டி மதுக்கரை பகுதியில் நடைபெற்றது. இதில் நமிதா பேட்டிங், பௌலிங் ரெண்டுமே தெரியும் எனக் கூறி சிக்ஸர் அடித்து அசத்தினார். நமீதா கிரிக்கெட் விளையாடிய வீடியோவும், போட்டோக்களும் சமூக வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here