நடிகை சன்னி லியோன் இன்று தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் சமூக வலைதளம் மூலம் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டில் என்ட்ரி

1981ம் ஆண்டு மே 13 ஆம் தேதி பிறந்தவர் நடிகை சன்னி லியோன். தனது இளமை காலம் முழுவதும் ஆபாச நடிகையாக இருந்த சன்னி லியோன், அப்போதே உலகளவில் ஃபேமஸ் ஆகி இருந்தார். பின்னர் பாலிவுட்டில் பிக் பாஸ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அதன்பின் 2012 ஆம் வெளியான ஜிஸ்ம் 2 என்ற படத்தில் கவர்ச்சி நடிகையாக என்ட்ரி கொடுத்தார். ஏகப்பட்ட பாலிவுட் கவர்ச்சி நடிகைகளுக்கு கடும் போட்டியாக சன்னி லியோன் மாறிய நிலையில், பாலிவுட் படங்களை கடந்து மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும், கலை நிகழ்ச்சிகளிலும், புத்தாண்டு கொண்டாட்டங்களிலும், ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார்.

கவர்ச்சி கோஸ்ட்

நடிகர் ஜெய்யின் வடகறி படத்தில் ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடிகை சன்னி லியோன் நடனமாடினார். அதன் பின்னர் தமிழில் வீரம்மா தேவி படத்தில் நடித்து வந்தார். ஆனால், அந்த படம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. கடந்த ஆண்டு இறுதியில் “ஓ மை கோஸ்ட்” படத்தில் கவர்ச்சி கோஸ்ட்டாக வந்து கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். ஷீரோ எனும் படத்திலும் நடித்து வருகிறார்.

குவியும் வாழ்த்து

42 வயதானாலும் இன்னமும் தனது இன்ஸ்டாகிராமில் பிகினி புகைப்படங்களை பகிர்ந்து இணைய வாசிகளுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்து வருகிறார் நடிகை சன்னி லியோன். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு, #SunnyLeone ஹாஷ்டேக்கில் ஏகப்பட்ட சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here