நடிகர் கார்த்திக் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ தமிழ் பிரபலம்

ஜீ தமிழில் “ஆபீஸ்” என்ற தொடரின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகர் கார்த்திக் ராஜ், செம்பருத்தி தொடரிலும் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் சில காரணங்களால் அந்த தொடரை விட்டு விலகிய அவர், ரம்யா பாண்டியனுடன் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடித்தார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் “கார்த்திகை தீபம்” தொடரில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இந்த தொடரில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டிவி ரிலீஸ்

இந்நிலையில் தற்போது கார்த்திக் ராஜ் தயாரித்து நடித்துள்ள “பிளாக் அண்ட் ஒயிட்” என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், நேரடியாக டிவியில் இந்த திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. மே 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு “பிளாக் அண்ட் வைட்” திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த திரைப்படத்தைக் காண கார்த்திக்கின் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here