ராஜமெளலி இயக்கத்தில் வெளியான RRR திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் செய்துள்ள விவரம் தற்போது வெளியே வந்துள்ளது.

விருதுகளை அள்ளியது

தெலுங்கில் பிரம்மாண்ட இயக்குநர் என்று அனைவராலும் அழைக்கப்படும் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி ஆஸ்கர் விருது, கோல்டன் குலோப் விருது என்று பிரம்மாண்ட விருதுகளை அள்ளிக் குவித்தது RRR திரைப்படம். இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவகன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். சுமார் ரூ.550 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம், ரூ. 1,250 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தெலுங்கு, தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் உருவான இந்த திரைப்படம், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு வெற்றியை பெற்றது.

RRR பாகம் 2

RRR படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் உருவாகும், உடனடியாக படத்தின் பணிகளை விரைவுப்படுத்த முடிவெடுத்துள்ளேன், கீரவாணி சொன்ன ஒன்லைன் என்னை கவர்ந்துள்ளது. அதனால் இந்த கதையை முழுமையாக எழுதி முடித்துவிட்டு அடுத்தகட்ட பணிகளை தொடங்குவேன் என்று கூறியிருந்தார் இயக்குநர் ராஜமௌலி.

ஜப்பானில் வசூல்

இந்நிலையில், RRR படத்தை ஜப்பானியர்கள் ஆர்வமாக பார்த்துள்ளனர். ஜப்பானில் இந்த திரைப்படம் 200 நாட்கள் ஓடி ரூ.119 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,235 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. இந்த மிகப்பெரிய வெற்றியால் RRR திரைப்பட குழுவினர் செம குஷியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here