கவின் நடிக்க போகும் புது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

டாடா வெற்றிக்குப் பிறகு கவினுக்கு மார்க்கெட் எதிரி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், பல படங்களில் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் கவின், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கப்போகும் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். சதீஷ் இயக்குநராக அறிமுகம் ஆகும் இந்த படத்தை, ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க உள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி கவினுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறியிருந்தனர். ஆனால் தற்போது மாளவிகா மோகன் நடிக்கப் போவதாக கூறுகின்றனர். யார் ஹீரோயின் என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமான தகவல் வெளிவரவில்லை.

ரொமான்டிக் டைட்டில்

கவின் நடிக்கப்போகும் இந்த புது படத்தின் டைட்டில் பற்றி தகவல் வெளிவந்துள்ளது. இந்தப் படத்திற்கு “கிஸ்” என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ரொமான்டிக்கான டைட்டில் ஆக இருப்பதினால் இந்த திரைப்படம் காதல் கதையை மையமாக வைத்து படம் உருவாக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதால் கண்டிப்பாக படத்தில் இடம்பெறும் பாடல்கள் வேற லெவல் ஹிட் ஆகும் என்ற ஆவல் நிலவி வருகிறது. ‘கிஸ்’ திரைப்படம் குறித்து கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here