தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி ஹோட்டலுக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

திருமணம்

பிரபல தொலைக்காட்சி சேனலில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கியவர் மகாலட்சுமி. பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கிய மகாலட்சுமி, பல தொடர்களில் நடித்து வந்தார். சீரியல்களில் மிகவும் பிரபலமான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்த அவர், தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவ்

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி, சோசியல் மீடியாக்களில் கணவருடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தன் கணவர் ரவீந்தருடன் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வரும் மகாலட்சுமி, சமீபத்தில் ஹோட்டலுக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டு மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சாப்பாட்டு பக்கிகள் என கேப்ஷன் போட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எப்போதும் இதுபோல் சந்தோசமாக இருங்கள் என்று வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here