பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள ஆதி புருஷ் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ட்ரோலில் சிக்கிய பிரபாஸ்

ஓம் ராவத் இயக்கத்தில் கிருத்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஆதிபுரிஷ் படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. ராமாயண கதையை மையப்படுத்தி பிரம்மாண்டமாக படமாக்க படத்தின் இயக்குநர் மெனக்கெட்டு இருப்பது இந்த டிரெய்லரிலேயே தெரிகிறது. ஆரம்பத்தில் வெளியான ஆதி புருஷ் படத்தின் போஸ்டர்களும், டீசரும் ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் அனிமேஷனில் அதிக கவனம் செலுத்தி, தற்போது படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் ராமராக பிரபாஸ், சீதையாக கிருத்தி சனோன், ராவணனாக சைஃப் அலி கானும் நடித்துள்ளனர்.

கலவையான விமர்சனம்

ஆதி புருஷ் படத்தின் மீது கடுமையான விமர்சனம் எழுந்ததால், கடந்த பொங்கலன்று ரிலீஸ் ஆக வேண்டிய இந்த படத்தின் ரிலீசை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டு, படத்தை மெருகேற்றும் பணியில் இறங்கியிருந்த பட குழுவிற்கு, இந்த டிரெய்லர் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம், வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீப காலமாக பிரபாஸ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் தோல்வி படங்களாக அமைந்துள்ளதால், ஆதி புருஷ் படத்தில் தனது முழு உழைப்பையும் போட்டுள்ளார். நேற்று வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 16 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 6 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. தெலுங்கில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள இந்த டிரெய்லர், தமிழில் 30 லட்சம், கன்னடத்தில் 20 லட்சம், மலையாளத்தில் 30 லட்சம் என ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்பட்டுள்ளது. 3d தொழில்நுட்பத்துடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம், பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here