பாரம்பரிய உடையுடன் தோனி, வார்னர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள டெல்லி கேப்பிட்டள்ஸ் அணியின் டுவிட் பதிவு வைரலாகி வருகிறது.

விறுவிறுப்பான ஆட்டம்

16-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் மைதானத்தில் இன்று நடைபெறும் 55-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டஸ் அணிகள் மோதுகின்றன.

மேட்சுக்கு ரெடியா

இந்நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் டுவிட்டர் பக்கத்தில் இன்றைய போட்டி குறித்து டோனி – வார்னர் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “ந்த பதிவில், “வணக்கம் வாழவைக்கும் சென்னை.. இன்னைக்கு மேட்சுக்கு ரெடியா” என குறிப்பிட்டுள்ளனர். அந்த பதிவில் தோனி மற்றும் டேவிட் வார்னர் பாரம்பரிய உடையுடன் கையில் இளநீர் வைத்தபடி இருந்தனர். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here