நடிகர் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் “டெஸ்ட்” திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார்.

பலமான கூட்டணி

நடிகர் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் “டெஸ்ட்”. முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பெங்களூரில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. 2024 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆக இருக்கும் ‘டெஸ்ட்’ திரைப்படம் பேன் இந்தியா படமாக ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. வை நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை, எஸ். சசிகாந்த் இயக்கி வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில், இந்த திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளதாக பட குழுவினர் போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர்.

இணைந்த பிரபலங்கள்

மாதவன் மற்றும் சித்தார்த் இணைந்து ஆயுத எழுத்து மற்றும் ரங் தே பசந்தி என்ற படத்தில் நடித்திருந்தனர். தற்போது 17 வருடங்கள் கழித்து இருவரும் டெஸ்ட் படத்தில் இணைந்துள்ளனர். 2003 ஆம் ஆண்டு வெளியான “பிரியமான தோழி” படத்தில் கிரிக்கெட்டராக நடிகர் மாதவன் நடித்திருந்தார். அதன்பிறகு 20 வருடங்கள் கழித்து கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படத்தில் நடிக்கிறார். தற்போது “டெஸ்ட்” திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளதாக போஸ்டர் மூலம் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்கனவே மாதவன் மற்றும் மீரா ஜாஸ்மின் இணைந்து 2002 ஆம் ஆண்டு “ரன்” படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here