சூர்யா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான “உன்னை நினைத்து” திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

பல ஹீரோக்கள் ஹிட்

விக்ரமன் இயக்கத்தில் வெளியான உன்னை நினைத்து திரைப்படம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் திரைப்படங்களில் ஒன்று. விக்ரமன் இயக்கத்தில் விஜயின் நடிப்பில் உருவான பூவே உனக்காக திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது, அதேபோல் அஜித்தை வைத்து உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தையும் இயக்கினார். தற்போது முன்னணி ஹீரோக்களாக இருக்கக்கூடிய அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட அனைவர்க்கும் ஆரம்ப காலத்தில் இயக்குநர் விக்ரமனின் படங்கள் அவர்களின் கெரியருக்கு முக்கியமான ஒன்றாக அமைந்தது. இந்நிலையில் 2002 ஆம் ஆண்டு விஜய் வைத்து மீண்டும் ஒரு காதல் கதையை இயக்கலாம் என்று விக்ரமன் பிளான் செய்திருந்தார். விஜய்யும் ஒருநாள் ஷூட்டிங் சென்றிருந்த நிலையில், எதிர்பாராத விதமாக விஜய் அந்த படத்தில் இருந்து விலகினார்.

விலகிய விஜய்

விஜய் விலகிய பிறகு சூர்யா “உன்னை நினைத்து” படத்தில் கமிட் ஆனார். இந்த படம் சூர்யாவுக்கும் ஒரு திருப்புமுனை படமாகவே அமைந்தது. இந்த படத்தில் சூர்யா, லைலா, சிநேகா, பிரேம்ஜி, மயில்சாமி, ரமேஷ் கண்ணா, சார்லி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். முக்கோண காதல் கதையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம், 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக அமைந்தது. சிற்பி இசையில் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அது மட்டுமில்லாமல் அந்த ஆண்டிற்கான மாநில அரசின் விருதுகள் பட்டியலில் இந்த திரைப்படம் சிறந்த படம், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என நான்கு விருதுகளை தட்டிச் சென்றது. அதேபோல் சிறந்த துணை நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதையும் நடிகை சினேகா பெற்றார். ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ள “உன்னை நினைத்து” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here