ஜீ தமிழில் மே 8-ம் தேதி முதல் மதியம் 2 மணிக்கு சண்டக்கோழி புத்தம் புதிய சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது.

புது தொடர்

ஜீ தமிழில் மே 8-ம் தேதி முதல் மதியம் 2 மணிக்கு சண்டக்கோழி புத்தம் புதிய சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக ரியா விஸ்வநாதன் நடிக்க அவருக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் சீரியல் புகழ் நியாஸ் நடிக்கிறார். பெண்கள் என்றாலே வெறுப்பு, கோபம் என வளரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த விக்ரம் ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தனது குடும்பத்துக்காக கேட்டரிங் பிசினஸ் செய்து வருகிறார் மகா. ஜாலியான பெண்ணாகவும் அதே சமயம் தனக்கோ தனது குடும்பத்துக்கும் பிரச்சனை என்றால் சண்டைக்கோழியாகவும் இருந்து வருகிறார் மகா. விக்ரம், மகா என இருவரின் முதல் சந்திப்பும் மோதலில் தொடங்குகிறது. அதன்பிறகு இந்த மோதல் காதலாக மாறுகிறதா? இல்லையா? என்பது தான் இந்த தொடரின் கதை.

நல்ல வரவேற்பு

சமீபத்தில் இந்த தொடரின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் இரண்டு எபிசோடுகளை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த தொடரில் ஹீரோவின் அம்மாவாக கிருபா நந்தினி நடிக்கின்றார். இவர்களுடன் செம்பருத்தி சீரியல் புகழ் கதிர், ஸ்வேதா, தமிழ்ச்செல்வி, சிவகுமார், மோகனா அசோக் பாண்டியன், பாக்கியலட்சுமி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here