பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சின்னத்திரை நாயகி பெப்சி உமா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வாங்க பழகலாம்

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளினியாக இருந்தவர் பெப்சி உமா. இவரது முழு பெயர் உமா மகேஸ்வரி. பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதால் இவரை பெப்சி உமா என்று ரசிகர்கள் அழைக்க தொடங்கினர். 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே தொகுப்பாளினியாக அறிமுகமான பெப்சி உமா, முதன்முதலில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “வாங்க பழகலாம்” என்ற நிகழ்ச்சி மூலம் தனது கெரியரை தொடங்கினார். “வாங்க பழகலாம்” நிகழ்ச்சி வெற்றிபெற்ற பிறகு தான் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் பெப்சி உமா. பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியில் உமாவின் சிரிப்பும், பேச்சும், புடவையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர். வார இறுதியில் ஒளிபரப்பாகும் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி, கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது.

சீரியலில் என்ட்ரி?

இந்த நிலையில், பல ஆண்டுகளாக எங்கே போனார் என்று தெரியாமல் இருந்த பெப்சி உமா, சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த விழாவில், மீண்டும் சின்னத்திரையில் வருவீர்களா என தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு, விரைவில் எதிர்பார்க்கலாம் என பதிலளித்தார் பெப்சி உமா. இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் பெப்சி உமா நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் பட வாய்ப்புகள் வந்தும் அதை தவிர்த்த பெப்சி உமா, சின்னத்திரைய்ல் நடிப்பாரா? என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here