சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

‘மாவீரன்’

‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் திரைப்படம் ‘மாவீரன்’. சிவகார்த்திகேயன் நடிக்கும் இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரல் நடிக்கின்றனர். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் ‘மாவீருடு’ என்று பெயர் வைத்துள்ளனர்.

ரிலீஸ் தேதி

‘மாவீரன்’ படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி அனைவரின் கவனம் பெற்றது. மாவீரன்’ திரைப்படம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மாவீரன் திரைப்படம் வருகிற ஜூலை 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here