இயக்குநர் இளன் இயக்கும் படத்தில் நடிகர் கவின் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து படங்கள்

டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் நடிகர் கவின், டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கப்போகும் அடுத்த படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்தது. மேலும் இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் சதீஷ் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படம் இதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க இருப்பதாகவும், படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாகவும் கூறியிருந்தனர்.

புதிய படத்தில் கமிட்

தற்போது சதீஷ் இயக்க இருக்கும் திரைப்படம் கொஞ்சம் தாமதமாகுவதாக கூறுகின்றனர். அதனால் அடுத்த படத்தில் நடிக்க நடிகர் கவின் கமிட் ஆகியுள்ளார். இயக்குநர் இளன் இயக்கத்தில் இப்போது கவின் நடிக்க உள்ளதாகவும் கூறுகின்றனர். இந்த திரைப்படத்தில் ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அந்த படம் துவங்கிய சில நாட்களிலேயே டிராப்பானதால், தற்போது கவினை வைத்து இந்த படத்தை மீண்டும் துவங்க உள்ளார் இயக்குநர் இளன். இப்படத்தை ரைஸ் ப்ரோடக்ஷன் தயாரிக்கின்றனர். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ‘ஊர் குருவி’ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார் கவின். இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here