பிக் பாஸ் சீசன் 7க்கான வேலைகளை விஜய் டிவி துவங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

வெற்றி பெற்ற 6 சீசன்

விஜய் டிவியில் முக்கிய நிகழ்ச்சியாக இருக்கக்கூடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. உலகநாயகன் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது இதன் வெற்றிக்கு முக்கிய காரண்மாக இருந்து வருகிறது. சில ஆண்டுகளாகவே விஜய் டிவியில் முன்னணி நிகழ்ச்சியாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த நிகழ்ச்சி, தற்போது 7ஆம் சீசனிலும் அடி எடுத்து வைக்கிறது. இதன் வேலைகளை விஜய் டிவி துவங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

விறுவிறுப்பான ஏற்பாடுகள்

சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் வாய்ப்புகள் கிடைக்காத பல நடிகர், நடிகைகள் பிக் பாஸ்சில் பங்கேற்ற பிறகு பல பட வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். ஒரே வீட்டில் வசிக்கும் பலரின் மனநிலையை சோதிக்கும் விதமாக அமையும் இந்த நிகழ்ச்சியின் டாஸ்குகள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில் சீசன் 7 ஏற்பாடுகள் நிகழ்ச்சி துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here