நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

வாரிசு நடிகை

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் எதிர்பார்த்த அளவு அந்த திரைப்படம் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியாக இருந்து வந்த ராஷ்மிகா, புஷ்பா படத்தில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்தார். பின்னர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது.

காதல் கிசுகிசு

சமீபகாலமாகவே காதல் கிசுகிசுகளில் சிக்கி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களையும், போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் கொரியன் நாயகி போல் கெட்டப் போட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராஷ்மிகா. எப்போதும் செம மாடர்னாக இருக்கக்கூடிய ராஷ்மிகா மந்தனா, கொரியன் கெட்டப்பில் அசத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றது.

கொரியன் கெட்டப்

தற்போது அனிமல் என்ற ஹிந்தி படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, தெலுங்கில் புஷ்பா இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் ரெயின்போ திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்ற வருகின்றது. பல படங்களை கைவசம் வைத்துள்ள நடிகை ராஷ்மிகா, கிடைக்கும் நேரத்தில் எல்லாம் போட்டோஷூட் நடத்தி வருகிறார். அப்படி வெளியிட்ட கொரியன் கெட்டப் புகைப்படங்கள் அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here