கங்குவா படத்தை அமேசான் பிரைம் வீடியோ பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் கூறியுள்ளார்.

ஹாட்ரிக் வெற்றி

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு, அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கங்குவா திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.

OTT உரிமை

கங்குவா படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், யு வி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. 3d தொழில்நுட்பத்துடன் உருவாக்கி வரும் இந்த திரைப்படத்தின் 50 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது கொடைக்கானலில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் OTT உரிமையை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அமேசான் பிரைம் வீடியோ கங்குவா படத்தை பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மிஞ்சிய சூர்யா

அமேசான் OTT நிறுவனம் இந்த படத்தை ரூ.80 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதுவும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளுக்கு மட்டுமே இத்தனை கோடி கொடுத்து உரிமையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் ரஜினி, கமல் படங்களை மிஞ்சும் அளவுக்கு சூர்யா படத்தின் OTT உரிமை விற்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here