விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கோபி (சதீஷ் குமார்) ரசிகர்களுக்கு குட் நியூஸ் கூறியுள்ளார்.

மல்லுக்கட்டும் கோபி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் பாக்கியலட்சுமி. பாக்யாவை விவாகரத்து செய்த பிறகு ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, பல இன்னல்களை சந்திக்கிறார். தினம் தினம் பிரச்சனை ஏற்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் கோபி, மது அருந்த தொடங்கிவிட்டார். ஒரு நாள் மது அருந்திவிட்டு ரோட்டில் நடந்து வருவதை கோபியின் மூத்த மகன் செழியன் பார்த்துவிட்டு, கோபியை வீட்டிற்கு அழைத்து வருகிறார். கோபி, பாக்கியா வீட்டில் இருப்பது தெரிந்த ராதிகா பெட்டியுடன் அவரும் வந்து இங்கேயே தங்குகிறார். அதன்பிறகு வீட்டில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் கோபி.

வம்பிழுக்கும் ராதிகா

ராதிகாவுக்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் சுத்தமாக ஒத்து வராத நிலையில், கோபியை ஓவராக அதிகாரம் செய்கிறார் ராதிகா. இப்போது தான் பாக்கியாவின் அருமை கோபிக்க மெல்ல மெல்ல தெரிய வருகிறது. நம்ம வீட்டுக்கே போகலாம் என்று ராதிகாவை கோபி கூப்பிட்டாலும், முடியாது இங்கதான் இருப்பேன் என்று கூறி வீம்புக்கு வம்பு இழுத்து வருகிறார் ராதிகா. இவ்வாறு தினம் தினம் கலவரமாக மாறுகிறது வீடு. விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் சதீஷ்குமார். என்னதான் இவரது கேரக்டர் நெகட்டிவ் ரோலாக இருந்தாலும் இவரின் நடிப்பு, முக ரியாக்ஷன் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

ஓகே சொன்ன சதீஷ்

சமீபத்தில் இந்த தொடரைவிட்டு விலகுவதாக சதீஷ்குமார் கூறியிருந்தார். ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளாத ரசிகர்கள், கோபி கதாபாத்திரத்திற்கு நீங்கள் தான் சரியாக இருப்பீர்கள் என்றும் வேறு யாரும் இந்த கேரக்டருக்கு செட் ஆக மாட்டார்கள் என்றும் சதீஷ்குமாருக்கு ஆதரவாக கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். இதனை கவனித்த சீரியல் குழுவினர், சதீஷ்குமாரை கன்வின்ஸ் செய்து தொடர்ந்து அதே கதாப்பாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது. தற்போது சதீஷ்குமார் ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு அந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பதாக கூறியுள்ளார். இந்த தகவல் பாக்கியலக்ஷ்மி தொடர் ரசிகர்களுக்க மிகவும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சதீஷ்குமாருக்கு சோசியல் மீடியாக்களில் ஆதரவு பெருகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here