பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அமோக வரவேற்பு

2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பு மிக பிரம்மாண்டமாக பேசப்பட்டது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் விஜய் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள இந்த திரைப்படத்தின் டிரெய்லர் கடந்த 29ஆம் தேதி வெளியானது. டிரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 7 மில்லியன்களுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளனர்.

பலமான கூட்டணி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2 ஆன்டி பிகிலி’ படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மிகுந்த எதிர்பார்ப்பு

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷனின் பாத்திமா விஜய் ஆண்டனி, தனித்துவமான கதைகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படங்களை தொடர்ச்சியாகத் தயாரித்து, விமர்சகர்களின் பாராட்டுக்களைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை தந்துள்ளார். ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், இப்படம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி பெரும் என்று எதிர்பாக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here