உதயநிதி ஸ்டாலின், வடிவேலுவுடன் வெளியாகியுள்ள மாமன்னன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் ஆவலைத் தூண்டியுள்ளது.

துப்பாக்கியுடன் வடிவேலு

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் மாமன்னன். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகி வரும் மாமன்னம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், இன்று மாஸான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மாஸ் போஸ்டர்

கையில் பெரிய கத்தியுடன் உதயநிதி ஸ்டாலினும், வேட்டி சட்டையில் கையில் துப்பாக்கியுடன் வடிவேலுவும் வித்தியாசமான தோற்றத்தில் அமர்ந்திருக்கும் இந்த போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது. எப்பொழுதும் காமெடியனாக பார்த்து ரசித்த வடிவேலுவை, இந்த படத்தில் புதிய பரிமாணத்தில் ரசிகர்கள் பார்க்கப் போகிறார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. மாமன்னன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here