ஏ.ஆர்.ரகுமானை கேள்வி கேட்ட நடிகை கஸ்தூரிக்கு மாசாக ரிப்ளை கொடுத்துள்ளார் இசை புயல்.
தமிழ் பற்று
தமிழில் மட்டுமில்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர். ரகுமான். தமிழ் மொழி மீது அதிக பற்று உள்ள இவர், எங்கு சென்றாலும் தமிழில் பேசுவதையே வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் அனைத்து மேடையிலும் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையிலேயே இதுவரை நடந்து கொண்டுள்ளார். இதனாலையே இவருக்கு தனி மதிப்பும், மரியாதையும் மக்கள் மத்தியில் உள்ளது.
தமிழ் தெரியாது
சமீபத்தில் விருது வழங்கும் விழாவில் ஏ.ஆர். ரகுமான் தனது மனைவியுடன் பங்கேற்றார். அப்போது மேடையில் விருது பெற்ற பிறகு பேச தயாரான தன் மனைவியை, ஹிந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் ப்ளீஸ் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார். அதன்பிறகு பேசிய பேசத் துவங்கிய அவரது மனைவி, “மன்னிக்கவும் தமிழில் சரளமாக பேச எனக்கு வராது. அதனால் தயவு செய்து மன்னித்துவிடுங்கள்” என்று கூறிவிட்டு ஆங்கிலத்தில் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
மாஸ் ரிப்ளை
ஏ.ஆர். ரகுமான் மனைவி ஆங்கிலத்தில் பேசிய வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி, “என்னது ஏ.ஆர். ரகுமான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா? அவங்க தாய்மொழி என்ன? வீட்டுல, குடும்பத்துல என்ன பேசுவீங்க? என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு ஏ.ஆர்.ரகுமான் பதில் அளிக்கும் விதமாக “காதலுக்கு மரியாதை” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கும் ஏ.ஆர்.ரகுமானின் சொந்த வாழ்க்கையில், ஏன் தலை இடுகிறீர்கள் என்று கஸ்தூரியை இணையதளவாசிகள் கமெண்டுகள் மூலம் வறுத்து எடுத்து வருகின்றனர்.