நாடோடிகள் படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனன்யா குடும்ப புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் படங்கள்

நாடோடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை அனன்யா முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை தட்டிச் சென்றார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார். அதன்பிறகு சீடன், எங்கேயும் எப்போதும், புலிவால், இரவும் பகலும் வரும் உள்ளிட்ட சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருந்தார். இவரது நடிப்பில் வெளியான “எங்கேயும் எப்போதும்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. ஜெய், சர்வானந்த், அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் தயாரித்திருந்தார்.

குடும்ப புகைப்படங்கள் வைரல்

கடைசியாக இவர் ‘காட் ஃபாதர்’ என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நட்டி ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக அனன்யா நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது மலையாளத்தில் “தி தேர்ட் மர்டர்” என்ற படத்திலும், சுனில் இப்ராஹிம் படத்திலும் நடித்து வருகிறார். 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை அனன்யா, தொடர்ந்து பல மலையாள படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் திடீரென இவரது திருமண புகைப்படங்களும், குடும்ப புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகின்றது.



LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here