நடிகர் ராம்சரண் – உபாசனா காமினேனி கொனிடேலா தம்பதியின் வளைகாப்பு விழாவின் எஸ்க்ளுசிவ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிடித்த ஜோடி

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா காமினேனி கொனிடேலா ஆகிய இருவரும் கடந்த வார தொடக்கத்தில் ‘வேனிட்டி ஃபேர்: எனும் சர்வதேச யூட்யூப் சேனலில் வெளியான ஆஸ்கார் விருதுக்கான விழாவில் கலந்து கொள்வதற்கு தயாராகும் வீடியோ, அதிக அளவிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்தது. அப்போது கர்ப்பிணியான தனது மனைவி உபாசனாவின் கைகளை பிடித்து, அவர்கள் நடந்து வந்த வீடியோ ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்பட்டது.

வளைகாப்பு விழா

இந்நிலையில், துபாயில் உபாசனா காமினேனி கொனிடேலாக்கு வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இரு தரப்பினரின் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ராம்சரண் – உபாசானா காமினேனி கொனிடேலா தம்பதிகளுடன் பிங்கி ரெட்டி, சானியா மிர்சா, கனிகா கபூர், அல்லு அர்ஜுன், ராம் சரணின் பெற்றோர்களான சிரஞ்சீவி மற்றும் சுரேகா கொனிடேலா, அவரின் சகோதரிகளான சுஷ்மிதா மற்றும் ஸ்ரீஜா, உபாசனாவின் தாயார் சோபனா காமினேனி, சங்கீதா ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் உபாசனா காமினேனி கொனிடேலா நீலம் மற்றும் பிங்க் வண்ண உடையில் தளர்வான ஸ்டைலில் ஜொலிக்கிறார். ராம் சரண் கருப்பு வண்ண உடையில் ஸ்மார்ட் சினோஸ் எனப்படும் வெள்ளை சட்டையிலும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். இந்த தம்பதியின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்கள் பகிர்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here