கமிட்டாகி இருக்கும் புது படத்திற்காக சிலம்பம் கற்கிறார் நடிகை ரித்திகா சிங்.

முதல் ஹிட்

2016 ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். இவரது முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். அதன்பிறகு ‘ஆண்டவன் கட்டளை’, ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். அடுத்து இவர் நடிக்கும் படத்தை பிரபல தெலுங்கு நிறுவனம் தயாரித்து வருகின்றது. தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் பழிவாங்கும் பெண்ணாக ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

சிலம்ப பயிற்சி

ரித்திகா சிங் நடிக்கும் புதிய படத்தில் சிலம்பம் முக்கிய பங்கு வகிப்பதால், ஒரு மாதமாக சிலம்பம் சுற்றுவதற்கு பயிற்சி பெற்று வருகிறார் நடிகை ரித்திகா. இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாக உள்ளது. பாக்ஸிங், உடற்பயிற்சி என்று ஏற்கனவே தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரு ரித்திகா, தற்போது சிலம்பமும் கற்று வருகிறார். இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here