விஜய் டிவியில் மோதலும் காதலும் என்ற புதிய தொடர் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.

மோதலுக்கு பின் காதல்

விஜய் டிவியில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி, திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:30 மணிக்கு “மோதலும் காதலும்” என்ற புதிய தொடர் ஒளிபரப்பாக உள்ளது. விக்ரம் மற்றும் வேதாவின் காதல் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரின் மீது ரசிகர்களுக்கு அதிக ஆர்வம் இருந்து வருகிறது. பார்த்தவுடன் காதல், பார்க்காமலே காதல், உள்ளிட்ட பல காதல் கதைகளை ரசிகர்கள் பார்த்துள்ளனர். அதே போல் ஈகோ மோதலில் ஆரம்பிக்கும் இந்த நாயகன் மற்றும் நாயகியின் பயணம் பின் காதலாக மாறுகிறது. இதையே மையமாக வைத்து இந்த தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. ஹீரோ மற்றும் ஹீரோயின் கெமிஸ்ட்ரி சூப்பராக இருப்பதால் இந்த சீரியல் நல்ல வரவேற்பு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஈகோ மோதல்

விஜய் டிவியில் ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா 2 உள்ளிட்ட பல தொடர்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதன் தொடர்ச்சியாக ‘மோதலும் காதலும்’ தொடரின் ப்ரோமோ ரசிகர்களின் ஆர்வத்தை கூட்டி உள்ளது. இத்தொடரில் விக்ரம் கதாபாத்திரத்தில் சமீர்ரும், வேதா கதாபாத்திரத்தில் அஸ்வதியும் நடித்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த தொடரின் ப்ரோமோவே வேற லெவலில் உள்ளது. இந்தத் தொடரை சுரேஷ் சண்முகம் எழுதி இயக்குகிறார். இவர் ஏற்கனவே அரண்மனைக்கிளி, தாழம்பூ ஆகிய சீரியல்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சமீர் அஸ்வதியுடன் இணைந்து ஜனனி, சந்தோஷ், நளினி, ரம்யா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here