உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக இருக்கும் மாமன்னன் திரைப்படம் ஜூன் 28ஆம் தேதி வெளியாக இருப்பதால், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன், ஜெயம் ரவியின் இறைவன் படம் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.

கடைசி படம்

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பரியேறும் பெருமாள், கர்ணன் உள்ளிட்ட டாப் ஹிட் படங்களை கொடுத்தவர் மாரி செல்வராஜ். இதனால் மாமன்னன் திரைப்படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது. இந்த திரைப்படம் ஜூன் 29ஆம் தேதி பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. அரசியலில் முழுவதாக ஈடுபட்டு வருவதால் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளதால், இவர் நடித்திருக்கும் கடைசி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மாமன்னன் படத்தின் சூட்டிங் அனைத்தும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு குறித்து அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மாற்றப்படும் தேதிகள்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன், ஜெயம் ரவியின் இறைவன் ஆகிய படங்களும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகப்போவதாக இதுவரை தகவல்கள் வெளிவந்திருந்தது. ஆனால் தற்போது இந்த படங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும் என்று கூறுகின்றனர். மாவீரன் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ரெட் ஜெயின் கைப்பற்றியுள்ளதால், மாமன்னன் படத்திற்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்பதற்காக மாவீரன் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என்று கூறப்படுகின்றது. மேலும் இறைவன் படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்படும் என்று கூறுகின்றனர். இதுவரை மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி குறித்து எந்த தகவலும் வெளியாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here