நடிகை மஞ்சு வாரியர் பிஎம்டபிள்யூ 1250 ஜி எஸ் பைக்கை வாங்கியுள்ளார்.

நல்ல வரவேற்பு

மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை மஞ்சு வாரியர், அசுரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலமானார். நடிகையாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், பாடகியாகவும் தனித்துவமாக இருந்து வருகிறார் மஞ்சு வாரியார். வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்த பிறகு தமிழில் இவருக்கு பெரிய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில ஆண்டுகள் கழித்து ‘துணிவு’ படத்தில் நடித்தார். அஜித் குமாருடன் இணைந்து நடித்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

பைக் மோகம்

பைக் மீது அதிக ஆர்வம் உள்ள நடிகை மஞ்சு வாரியர் துணிவு பட சூட்டிங் போதே அஜித் குமாரின் அகில இந்திய சுற்றுப்பயண பைக் ரைடிங்கில் கலந்து கொண்டார். தற்போது புதிய பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோகான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் பிஎம்டபிள்யூ 1250 ஜி எஸ் என்ற பைக்கை வாங்கி உள்ளார். தற்போது அந்த பைக்கில் மலையாள சினிமாவின் முன்னணி இயக்குநர் மற்றும் நடிகருமான சௌபின் சாகிருடன் ரைடு சென்று உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here