தன் மகனுக்கு பெயர் சூட்டியதை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் நடிகை பூர்ணா.

வாய்ப்புகள் குறைவு

இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கொடைக்கானல், கந்தகோட்டை, துரோகி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த தமிழ் படங்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து தன்னை நிலை நிறுத்திக்கொண்டார் பூர்ணா. 2021ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பெரும் பொருட்செலவில் பான் இந்தியா படமாக வெளியான தசரா படத்தில் அவர் நடித்திருந்தார்.

பெயர் சூட்டு விழா

துபாய் தொழிலதிபர் ஷனித் அசிப் அலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகை பூர்ணா, சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ஆண் குழந்தைக்கு தாயான நடிகை பூர்ணா, தனது குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். மேலும் தனது குழந்தையின் பெயரை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். “ஹம்தன் ஆசிப் அலி” என்று பெயர் சூட்டியுள்ளதாக கூறிய பூர்ணாவுக்கு, ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here