மாரி செல்வராஜ் இயக்கப்போகும் புதிய படத்தில் தனுஷுடன் இணைந்து நடிக்க வடிவேலுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகின்றது.

அசால்ட் தனுஷ்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் கலக்கி வரும் நடிகர் தனுஷ், இதுவரை வடிவேலுவுடன் இணைந்து நடிக்காமலேயே இருந்தார். ஆரம்ப காலத்தில் பல தடுமாற்றங்களை சந்தித்த தனுஷ் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, பொல்லாதவன் உள்ளிட்ட படங்களின் மூலம் தன்னை ஹீரோவாக நிலை நிறுத்திக் கொண்டார். ஹீரோக்களில் முன்னணி வரிசையில் இருக்கும் தனுஷை போல் காமெடியன்களில் முன்னணி வரிசையில் இருப்பவர் வைகைப்புயல் வடிவேலு. ரஜினி, விஜய் என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஹீரோவாகவும் சில படங்களில் கலக்கியிருக்கிறார் வடிவேலு.

நல்ல காம்போ

தனுஷும், வடிவேலும் படிக்காதவன் படத்தில் சேர்ந்து நடிக்க கமிட் ஆகி இருந்த சமயத்தில் விவேக்கின் கேரக்டருக்கு முதலில் வடிவேலுவை தான் நடிக்க வைத்து இருந்தனர். ஆனால் முதல் நாள் ஷூட்டிங் சமயத்தில் காமெடியில் தனுஷை ஓவர் டெக் செய்த வடிவேலு அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. அதன்பிறகு அந்த கதாபாத்திரத்திற்கு விவேக்கை நடிக்க வைத்தனர். அப்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனுஷும், வடிவேலுவும் இதுவரை எந்த படத்திலும் இணையாமலேயே இருந்து வந்தனர். ஆனால் இப்போது மாரி செல்வராஜ் இயக்கப் போகும் புதிய படத்தில் தனுஷுடன் இணைந்து வடிவேலுவை நடிக்க வைக்க படக்குழுவினர் பேசி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் வடிவேலு நடிப்பாரா? இல்லையா? என்று குழப்பமாகவே இருக்கின்றது. வடிவேலு நடித்தால் தனுஷ் மற்றும் வடிவேலு காம்போ கண்டிப்பாக ஒர்க்அவுட் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here