நடிகை ஷாலு ஷம்முவின் ஐ போன் திருடு போனதையடுத்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

நண்பர்களுடன் பார்ட்டி

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த 9 ஆம் தேதி இரவு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகை ஷாலு ஷம்மு நண்பர்களுடன் பங்கேற்றுள்ளார்.

போலீசில் புகார்

பின்னர் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும் போது செல்போன் காணமல் போனதை அறிந்த ஷாலு ஷம்மு, நட்சத்திர விடுதிக்கு சென்று தேடி இருக்கிறார். ஆனால் அங்கு ஐ போன் கிடைக்காததால், இதுதொடர்பாக பட்டினபாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகாரளித்துள்ளார். மேலும், ஐபோன் காணாமல் போன விவகாரத்தில் தன்னுடன் இருந்த நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறியதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here