லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விக்ரம் படத்தில் நடித்த பிரபல நடிகை இணைந்துள்ளார்.

சம்பவம் இருக்கு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. இப்படத்தில் விஜயுடன் இணைந்து திரிஷா, மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலி கான், மேத்யூ தாமஸ், கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு, தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. காஷ்மீரில் சூட்டிங் நடைபெற்ற பொழுது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.

விக்ரம் பட நடிகை

லியோ படத்தின் அப்டேட்டுகளை படக்குழுவினர் அடிக்கடி வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் நடிகை மைனா நந்தினி இப்படத்தில் இணைந்ததை புகைப்படம் வெளியிட்டு உறுதி படுத்தினார். தற்போது மேலும் ஒரு பிரபல நடிகை இப்படத்தில் இணைந்துள்ளார். லியோ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடிகை மாயா எஸ்.கிருஷ்ணன், கௌதம் வாசுதேவ் மேனனுடன் போஸ் கொடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here