இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா சமீபத்தில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வந்ததற்கான பின்னணி தற்போது தெரியவந்துள்ளது.

ஷூட்டிங்கில் பிஸி

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நடிகை நயன்தாரா, தற்போது ஹிந்தியில் ஷாருக்கானுடன் இணைந்து “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தை அட்லீ இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவிகிதம் முடிந்துள்ளது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றனர். ஜவான் படத்திற்காக இதுவரை மும்பையிலேயே தங்கி இருந்த நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவனுடன் குல தெய்வக்கோவிலுக்கு சென்றார். அந்த விடீயோக்களும் சமூகவலைத்தளத்தில் பரவியது.

திடீர் விசிட்

திருமணத்தின் போதே சொந்த பந்தங்களை மதிக்கவில்லை என்று விக்னேஷ் சிவன் மீது பலரும் குற்றம்சாட்டி வந்தனர். நயன்தாராவின் மீது உள்ள காதலால் சொந்தத்தை மொத்தமாக மறந்துவிட்டார் என்றும் தகவல் பரவியது. இந்நிலையில் சமீபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ளே மேல்வளத்தூரில் இருக்கும் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோயிலுக்கு தம்பதிகளாக சென்று சுவாமி தரிசனம் செய்தனர். ஜவான் படத்திற்காக மும்பையில் இருந்த நடிகை நயன்தாரா திடீரென்று குலதெய்வ கோயிலுக்கு விசிட் வந்ததற்கான காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

சமாதானம் பேசிய ஜோடி

விக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் முடிந்ததிலிருந்து சொந்த பந்தங்களுடன் மன வருத்தத்துடன் இருந்த விக்னேஷ் சிவன் மிகவும் அப்செட் ஆக இருந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் ஜோதிடரை நயன்தாரா பார்த்ததாகவும், அவர் குலதெய்வ கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து வழிபாடு நடத்த சொன்னதாகவும் கூறுகின்றனர். அதனால் தான் ஜோடியாக வந்து கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அப்படியே தங்களது சொந்த பந்தங்களை சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியிலும் இருவரும் இறங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இவரும் ஜோடியாக வந்து சமாதானம் செய்ததால் சொந்த பந்தங்கள் அனைவரும் இவர்களை ஏற்றுக்கொண்டதாகவும் தற்போது செய்தி நிலவி வருகிறது. இதை கேள்விப்பட்ட நயன்தாரா ரசிகர்கள் இதென்னப்பா லேடி சூப்பர் ஸ்டாருக்கு வந்த சோதனை என்று புலம்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here