புஷ்பா – தி ரூல் படத்தின் கிளிம்ஸ் வீடியோ மற்றும் போஸ்டர் லைக்ஸ்களை குவித்து டிரெண்டிங்கில் உள்ளது.

புஷ்பா வெற்றி

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில், உள்ளிட்ட பலரும் நடித்து வெளிவந்த திரைப்படம் புஷ்பா. 2021ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர்ஹிட் ஆனது. தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி கிட்டத்தட்ட ரூ.350 கோடி வரை வசூல்செய்து சாதனை படைத்தது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் சுகுமார்.

டிரெண்டிங்கில் புஷ்பா

புஷ்பா- தி ரூல் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ யூடியூபில் 64 மில்லியன் பார்வைகளையும், 2.48 மில்லியன் லைக்குகளையும் குவித்து தொடர்ந்து டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதனை போஸ்டர் மூலம் படகு குழுவினர் வெளியிட்டு சந்தோஷத்தை பகிர்ந்துள்ளனர். புஷ்பா முதல் பாகத்தை போல், இரண்டாம் பாகமும் வசூல்வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here