சமூக வலைதளப்பாக்கத்தில் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தீயாய் பரவி வருகிறது.

சிறந்த நடிகை

2015 ஆம் ஆண்டு ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். ஆரம்ப காலத்தில் இவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பிரபலமாகவில்லை என்பதால் சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். அதிலும் மொட்டை மாடியில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அந்த போட்டோ ஷூட் மூலம் மிகவும் பிரபலமானார் ரம்யா பாண்டியன்.

போட்டோஷூட் புகைப்படங்கள்

2021 ஆம் ஆண்டு ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அது மட்டுமில்லாமல் இப்படத்தில் ரம்யா பாண்டியனின் நடிப்பும் பிரபலமாக பேசப்பட்டது. அதன்பிறகு மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்ற இவர் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார். மீண்டும் பட வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கும் ரம்யா பாண்டியன், தற்போது கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். ஆரஞ்சு நிற உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here