சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு மன்னிப்பு கேட்பதாக திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா அறிவித்துள்ளார்.

சர்ச்சை வீடியோ

புத்த மத தலைவரான தலாய்லாமா சிறுவனின் உதட்டி முத்தம் கொடுக்கும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், தன் காலில் விழும் சிறுவனின் உதட்டில் தலாய்லாமா முத்தம் கொடுக்கிறார். இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்தனர்.

மன்னிப்பு

இந்த நிலையில், சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு தலாய்லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்; “சிறுவன், அவரது குடும்பம் மட்டுமின்றி உலக சகோதரர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். தனது செயல் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். பொது இடம், கேமரா முன் விளையாட்டுத்தனமாக தான் செயல்படுவது வழக்கம்” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here